/* */

கொரோனா ஊரடங்கு குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

கொரோனா ஊரடங்கு குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு
X

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த இன்று முதல் 20-ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

அது குறித்து சுரண்டை வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக சுரண்டை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனிக்கை சங்கரநாராயணன் தலைமை வகித்தார். வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவும், கொரோனாவை கட்டுப்படுத்த வியாபாரிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியம் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர்.

கூட்டத்தில் சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் ஏடி நடராஜன், துணைத்தலைவர் சிவசக்தி முத்தையா, இணைச் செயலாளர் துரைமுருகன், செய்தி தொடர்பாளர் ராஜகுமார், ஓட்டல் சங்க செயலாளர் ஜேக்கப், பொருளாளர் அழகுசுந்தரம், விநாயகம், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள், கணேசன், வெற்றிவேல், தெய்வேந்திரன், விநியோகஸ்தர் சங்க தலைவர் சுடலை காசி, நிர்வாகிகள் மாடசாமி, பால்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரகுமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசைக்கியப்பா நன்றி கூறினார்.

Updated On: 6 May 2021 1:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!