/* */

கடையம்; முயல், காடை கவுதாரியை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

கடையம் அருகே முயல், காடை கவுதாரியை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கடையம்; முயல், காடை கவுதாரியை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
X

முயல், காடை, கவுதாரிகளை வேட்டியாடி சமைத்த ஐந்து பேர் பிடிபட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிறுத்தை, மான், கடா மான், கரடி, புலி, யானை, உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இதனை அவ்வப்போது சில சமூக விரோதிகள் வேட்டையாடி வருகின்றனர். அப்போது வனத்துறை மற்றும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அபராதம் விதிக்கின்றனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை கோட்டம் கடையம் வனச்சரகத்திற்கு வெளிமண்டல பகுதியான ஆம்பூர் பீட் பகுதியில் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது ராமச்சந்திர புரத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி, சூரியநாராயணன், சரவணன், பிரபாகரன், முருகன் ஆகிய 5 பேர் வேட்டைக்கு சென்று காட்டு முயல் மற்றும் காடை கவுதாரியை கொன்று சுத்தம் செய்து சமைத்துக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து 5 பேரையும் வனத்துறையினர் பிடித்து, விசாரணை நடத்தியதில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் என ஐந்து பேருக்கு ரூபாய் 1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Updated On: 26 Jan 2023 6:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...