/* */

தனியார் மருத்தவமனைகள் கூடுதல் வசூல்- மருத்துவர்களுடன் விரைவில் ஆலோசனை

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

HIGHLIGHTS

தனியார் மருத்தவமனைகள் கூடுதல் வசூல்- மருத்துவர்களுடன் விரைவில் ஆலோசனை
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பான அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சமீரன், சென்னை பெருநகர வளர்ச்சி கழக உறுப்பினர் செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான எஸ்.ஜே.சிரு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து அரசு அலுவலர்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும், 100 நாள் வேலைக்கு செல்லும் உறுப்பினர்களுடன் தடுப்பூசிகள் போடுவதன் அவசியம் குறித்தும், மேலும் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

தற்போதுள்ள தடுப்பூசி இருப்பு குறித்தும் மேலும் தூய்மை பணியாளர்களை கொண்டு மாவட்டந்தோறும் கிருமி நாசினியினை தெளிப்பது குறித்தும், நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு தற்காலிக தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவது குறித்தும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவது குறித்தும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர்களுக்கு பாதுகாப்பு குறித்து இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது .

அதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பொது மக்களின் நலன்கருதி பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை காட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பின் அளவு குறைவாக தான் உள்ளது. தற்போது நிலைமையின் படி ஆக்ஸிஜன் சிலிண்டர் அளவும், தடுப்பூசிகளும் போதுமான அளவு உள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வழிகாட்டுதலின் படி மாவட்ட நிர்வாகமும் நானும், சட்டமன்ற உறுப்பினர்களும் சிறப்பாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு மக்களை நல்லமுறையில் வழிநடத்தி கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம்.

தற்பொழுது போதுமான தடுப்பூசி நம் கையிப்பில் உள்ளது, இன்றைய சூழ்நிலையில் 4000 தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசிகள் செலுத்துபவரின் எண்ணிக்கையின் படி அவற்றின் அளவு அதிகரிக்கப்படும்.

தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்வதில் செய்தியாளராகிய உங்கள் கையில் தான் உள்ளது. அதை பொதுமக்களிடையே முழுமையாக கொண்டு சேர்ப்பதற்கு செய்தியாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் , தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் முகாம்கள் அமைத்துத் தரப்படும்.

அந்த முகாமில் 20 அல்லது 40 நபர்கள் ஒன்றாக சேர்ந்து தடுப்பூசிகள் போடுவதன் மூலம் தடுப்பூசிகள் வீணாகாமல் அனைவருக்கு பயன்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். தற்பொழுது ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள் மற்றும் போதுமான அளவு தயார் நிலையில் உள்ளது.

மேலும், கொரோன வைரஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்தவமனைகள் கூடுதலாக ரூபாய் வசூலிப்பதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விலை நிர்ணயம் குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்படும்.

மேலும், கொரோனா வைரஸினை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் .தனுஷ் எம்.குமார் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா, மாவட்ட திட்ட இயக்கநர் ஊரக வளர்ச்சி முகமை சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.டி.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), கிருஷ்ணமுரளி (கடையநல்லூர்), .எஸ்.பழனிநாடார் (தென்காசி), பால் மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்),இணை இயக்குநர் (பொது சுகாதார பணிகள்) மரு.நெடுமாறன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 May 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்