/* */

டெண்டர் ஏலத்தில் திமுகவினர் மோதல்; நிர்வாகி மண்டை உடைப்பு, பதற்றம்

பல லட்சம் மதிப்பு பணிகளுக்கான ஏலத்தில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டு நிர்வாகி மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

டெண்டர் ஏலத்தில் திமுகவினர் மோதல்;  நிர்வாகி மண்டை உடைப்பு, பதற்றம்
X

மண்டை உடைக்கப்பட்ட திமுக நிர்வாகி.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான ஏலம் நடைபெற்ற நிலையில் கலந்துகொள்ளவந்த திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டு நிர்வாகி ஒருவருக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகேவுள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர் நடைபெற்றது. இதில் பங்கேற்க திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன் மற்றும் பல திமுக ஒப்பந்ததாரர்களும் பங்கேற்றனர்.

இதில் திடீரென திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் அணியினருக்கும், திமுக நிர்வாகி கோவானூர் சோமன் என்பவரது அணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருதரப்புக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு அருகில் இருந்த சேரை கொண்டு தாக்கி கொண்டதில் திமுக நிர்வாகி சோமன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து சோமனின் ஆதரவாளர்கள் எதிர் தரப்புடைய காரை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திமுகவினர் மோதல் சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 Aug 2021 1:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’