/* */

சிவகங்கை பேருந்து நிலையத்தில் திடீர் என தீ பிடித்து எரிந்த அரசு பஸ்

சிவகங்கை பேருந்து நிலையத்தில் திடீர் என தீ பிடித்து எரிந்த அரசு பஸ்சினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

சிவகங்கை பேருந்து நிலையத்தில் திடீர் என தீ பிடித்து எரிந்த அரசு பஸ்
X

சிவகங்கை பேருந்து நிலையத்தில் தீ பிடித்து எரிந்த அரசு பஸ்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையிலிருந்து அரசு பேருந்து நாட்டரசன் கோட்டை பகுதிக்கு செல்வதற்காக சிவகங்கை பேருந்து நிலையம் வந்துள்ளது. இந்த பேருந்தை ஓட்டுநர் கிறிஸ்துதாஸ் என்பவர் ஓட்டி வந்துள்ளார் .

இந்த பேருந்தை, சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் கீழே இறங்கிய போது திடீரென பேருந்தில் தீ பற்றியது பேருந்தின் என்ஜினில் இருந்து அதிக சத்தத்துடன் புகை கிளம்பியதால் அந்தப் பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது பேருந்து மற்றும் பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் அரசு பேருந்தின் எஞ்சின் சத்தத்தை கேட்டு அலறியடித்து ஓடினர் . அக்கம்பக்கத்தில் இருந்த சாலையோர கடைகளும் உடனடியாக அகற்றப்பட்டது.இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக பேருந்தில் இருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் சிவகங்கையில் பஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 March 2024 1:25 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு