/* */

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார.

HIGHLIGHTS

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா பொறுப்பேற்பு
X

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் புதிய எஸ்பியாக ஓம்பிரகாஷ் மீனா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவரை இராணிப்பேட்டை டிஎஸ்பி பூரணி, அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றச்செயல்களை கண்காணித்து தடுக்க நடவடிக்கைகள மேற்கொள்ளப்படும். தொடர்ந்து குற்றங்கள் நடக்கும் அரக்கோணம் போன்ற பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து குற்றங்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க வேண்டும், மீீீீறுபவர்கள் மீீீீீீீீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் காவல் நிலையங்களில் முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வரும் குற்ற வழக்குகளை கண்டறிந்து குற்றவாளிகளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சமூக விரோதசெயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

ராணிப்பேட்டை எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ஓம்பிரகாஷ் மீனா இராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் 1978ல் பிறந்தவர். எம்.ஏ முடித்து 2012ல் ஐபிஎஸ்ஸில் வெற்றிப்பெற்று தஞ்சையில் ஏஎஸ்பி, பின்னர் எஸ்பியாக திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகியவற்றில் இருந்தார். அதனைத்தொடர்ந்து நாகை மாவட்ட எஸ்பியாக இருந்துள்ளார்..

Updated On: 8 Jun 2021 3:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!