/* */

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க தேர்வு முகாம்

இராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள வழங்க தேர்வுசெய்யும் முகாமை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க தேர்வு முகாம்
X

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க தேர்வு செய்யும் முகாமை ,அமைச்சர் காந்தி குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார்.

இராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள விஸ்வாஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியின் சார்பில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மற்றும் சென்னை முட்டுக்காட்டிலுள்ள ஒன்றிற்கு மேற்பட்ட ஊனமுற்றோர் மேம்பாட்டு தேசிய நிறுவனம் ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க தேர்வு செய்யும் முகாம் நடந்தது .

முகாமை ,தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறையமைச்சர் ஆர். காந்தி குத்து விளக்கேற்றி துவக்கிவைத்து தொடங்கி வைத்தார். இராணிப்பேட்டை மாவட்டஆட்சியர. பாஸ்கரப்பாண்டியன் தலைமைத் தாங்கினார். அதனைத்தொடர்ந்து முகாமில் அமைச்சர் காந்தி பேசியதாவது:

25ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தெரிந்த பெண்மணியின் மாற்றுத்திறனாளி குழந்தைக்காக எனது குடும்பத்தார் உருவாக்கியதுதான் விஸ்வாஸ் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளி. எங்கள் குடும்பத்தில் பிறந்தநாள் என்றால் நாங்கள் இங்குதான் வந்து கொண்டாடுவோம் .இங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்குவோம். இந்தபள்ளி எங்கள் கோயில் போன்றது.

பள்ளியை 5 ஏக்கர்நிலப்பரப்பில் விரிவாக்கம் செய்ய கோரிக்கை வைத்துள்ளது. அது மாவட்ட ஆட்சியருடன் இணைந்து செயல்படுத்தப்படும். மேலும் பள்ளியில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயனடைய வேண்டும் என்று அவர் பேசினார் .

முகாமில் கைகால் இயக்கக் குறைபாடு உடையவர்கள் 66 பேர், காது கேளாத மற்றும் வாய்பேசாதோர் 54 பேர், கண் பார்வையற்றவர்கள் 14, மற்றும் அறிவுசார் குறைவு உடையவர்கள் 74என மொத்தம் 208 பேருக்கு விலையில்லாத மூன்றுசக்கர சைக்கிள், சற்கர நாற்காலி, ஊன்றுகோல், நடைவண்டி, சிபிசேர், கார்னர் சேர், வாக்கர் காதொலிக்கருவி, மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு பாடப்புத்தக உபகரணங்கள், பார்வையற்றோருக்கு மடக்குக்குச்சி, டாப்லெட், பிரெய்லி கிட் உருபெருக்கி போன்ற உபகரணங்கள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முகாம் துவக்க நிகழ்ச்சியில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், விஸ்வாஸ் பள்ளி நிர்வாகி கமலா காந்தி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயந்தி, NEPMD விரிவுரையாளர் சந்தோஷ் கண்ணா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மற்றும் விஸ்வாஸ் பள்ளி செயலாளர்கள் இராஜேஸ்வரி, விநோத்காந்தி, சந்தோஷ் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்

Updated On: 29 Nov 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...