/* */

குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மீனவர்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டும் மீனவர்கள். குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

குடும்பத்துடன்  தடுப்பூசி போட்டுக்  கொள்ளும் மீனவர்கள்
X
இராமநாதபுரம் மாவட்டத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் இன்று நள்ளிரவுடன் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால் நாளை முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் முன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக இராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறையினரால் இராமேஸ்வரம் அடுத்த பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீண்ட வரிசையில் மீனவர்கள் தங்களது குடும்பத்ததுடன் காத்திருந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றனர். மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் போது உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை உள்ளிட்டவைகள் செய்து கொள்ளவேண்டும். மீன் பிடித்து திரும்பும் போது தனிமனித இடைவெளியுடன், முக கவசம் அணிந்து கையுறைகள் பயன்படுத்த வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 15 Jun 2021 5:25 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  8. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  9. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  10. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...