/* */

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு: ஏஐடியுசி மீனவ அமைப்பினர் கடலில் இறங்கி போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராகவும், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாராளுமன்றத்தில் கொண்டு வர உள்ள மசோதவை நிறைவேற்ற கூடாது என வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி கண்டன முழக்கமிட்டனர்.

HIGHLIGHTS

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு: ஏஐடியுசி மீனவ அமைப்பினர் கடலில் இறங்கி போராட்டம்
X
இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐடியுசி மீனவ அமைப்பினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர் .

மீனவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடரில் கொண்டு வரவுள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இராமேஸ்வரத்தில் ஏஐடியுசி மீனவ அமைப்பு கடலில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லியில் துவங்க உள்ள பாராளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடரில், மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவால், கடல் எல்லை வரையறை, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை, மீன்பிடிக்கச் செல்லும்போது அனுமதிச்சீட்டு பெறுவதற்கு கட்டணம், பிடித்து வரும் மீன்களுக்கு விலை நிர்ணயம் போன்ற அம்சங்கள் மீனவர்களை பாதிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி இராமேஸ்வரம் ஏஐடியுசி மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாராளுமன்றத்தில் கெர்டு வர உள்ள மசோதவை நிறைவேற்ற கூடாது என மீனவர்கள் கண்டன முழக்கமிட்டனர். பின்னர் இந்திய கடல்சார் மீன்வள மசோதா எழுதப்பட்ட பேப்பரை கிழித்து கடலில் வீசியும் தங்களது எதிர்ப்பைத்தெரிவித்தனர்.

Updated On: 23 July 2021 2:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!