/* */

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர்களிடம் வாட்ஸ்அப்பில் பேசி வருகிறோம்: விளையாட்டுத்துறை அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும்  வீரர்களிடம் வாட்ஸ்அப்பில் பேசி வருகிறோம்: விளையாட்டுத்துறை அமைச்சர்
X

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ 7.50 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கு அடிக்கல் நாட்டு விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, முன்னாள் அரசு வழக்கறிஞரும், திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இதனையடுத்து சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற தமிழகத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் சென்றுள்ளனர். இவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக முதல்வர் சமீபத்தில் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் அனைவரும் 2தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உரிய உடல் தகுதியுடன் பாதுகாப்பாக டோக்கியோ செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து சென்றுள்ள ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுடன் வாட்ஸ் அப் குருப்பில் தினந்தோரும் பேசப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பாரம்பரிய சிலம்ப போட்டியை தமிழக அரசின் பாட நூலில் சேர்ப்பது, சிலம்ப போட்டியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் கொண்டு வருதல், சிலம்ப போட்டியை தேசிய அளவிலான போட்டியில் சேர்ப்பதற்கும், முதலவர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஒவ்வொருவரும் ஒரு ஆண்டிற்கு 5 மரக்கன்றுகளையாவது நட்டு வளர்க்க வேண்டும். தமிழகத்தில் காற்று மாசு மற்றும் நீர் மாசு ஏற்பட்ட பகுதிகள் கண்டறிந்து அதனை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு தொழிற்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு 80 சதவீதம் நீர் மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாக்கவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் உள்ள குளங்களை பாதுகாக்கவும், காவிரி நொய்யல், பவானி, காலிங்கராயன் வாய்க்கால் போன்ற நதிகளை பாதுகாப்பதற்கான முன்னோடி திட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொள்வார்கள்.

அதேபோல் தீபாவளி பண்டிகையின்போது பொது மக்கள் பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளி பண்டிகையின் போது மரக்கன்றுகள் நட்டு காற்று மாசுபடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சிவகாசி போன்ற மாவட்டங்களில் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வேற ஏதாவது மாற்று ஏற்பாடு செய்வதற்கு முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் மற்றும் நைனா முகமது, பாலு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 19 July 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!