/* */

தங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம்

தங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம்
X

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் நகைக் கடை வைத்திருப்பவர் வீரமணி. இவர் நகைக்கடை மட்டுமின்றி நகை செய்யும் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் போது குறைந்த எடையிலான தங்கத்திலான உலக கோப்பை மாதிரி வடிவத்தை செய்தது,

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அந்த நோயின் பாதிப்பு குறித்து மக்கள் அனைவரும் கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்கத்தை கொண்டு குறைந்த எடையிலான ஜிமிக்கி செய்ததும் அதேபோல் அதற்கு முன்பாக குறைந்த எடையிலான மாங்கல்யத்தை முதன்முதலில் செய்ததும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.


அதேபோல் நாளை மறுநாள் ஆறாம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் மக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் அவர் இன்று 2 கிராம் 500 மில்லி எடை கிராமில் செய்துள்ள இவிஎம் வாக்குப்பதிவு எந்திரம் மாதிரி காண்போரை கவர்ந்து உள்ளதோடு பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த நாக கடையின் உரிமையாளர் வீரமணி கூறுகையில், தான் ஏற்கனவே விழிப்புணர்வுக்காக தங்கத்திலான பல்வேறு மாதிரி அணிகலன்களை செய்துள்ளதாகவும் தற்போது தேர்தல் நேரம் என்பதால் மக்கள் அனைவரும் கண்டிப்பாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த தங்கத்திலான இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரம் மாதிரியை உருவாகியுள்ளதாகவும் இதன் மூலம் மக்களுக்கு விழிப்பு வருகிறது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

Updated On: 5 April 2021 2:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!