/* */

மாவட்ட தொழில் மையத்தால் பயன்படுத்தப்பட்ட பழைய நான்கு சக்கர வாகனம் ஏலம்

வருகின்ற 18. -ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

HIGHLIGHTS

மாவட்ட தொழில் மையத்தால் பயன்படுத்தப்பட்ட  பழைய  நான்கு சக்கர வாகனம் ஏலம்
X

புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டுகழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் வருகின்ற 18.05.2022-ம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனத்தினை வருகின்ற 18.05.2022-ம் தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

வாகனத்தினை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 11.05.2022 மற்றும் 12.05.2022 ஆகிய இரண்டு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டதொழில் மைய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொலிரோ வாகனத்தினை நேரில் பார்வையிடலாம்.

மேலும் வாகனத்தினை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 18.05.2022 அன்று காலை 10 மணிக்குள் தங்களது ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5,000 முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலத் தொகையுடன் சரக்கு மற்றும் சேவைவரி கட்டணமாக 18 சதவீதம் சேர்த்து முழு தொகையையும் உடனடியாக செலுத்தி விட்டு வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றியிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 28 April 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...