/* */

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் கோரிக்கை

பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் கோரிக்கை

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் கோரிக்கை
X

புதுக்கோட்டை ராஜகோபுரத்தில் இரண்டு சக்கர வாகனம் பழுது நீக்குவோர் நலச் சங்கத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய நகர காவல் ஆய்வாளர் குருநாதன்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அருகே மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நலச் சங்கம் துவக்க விழா நடைபெற்றது. துவக்க விழாவில் புதுக்கோட்டை நகரப்பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சங்க கூட்டத்தில் ஒவ்வொரு தொழிலாளர்களும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என தங்களுடைய கோரிக்கையை எடுத்துக் கூறினர்.

மேலும் இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் மனோகரன் செயலாளர் ஹாசிம் பாட்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் மனோகரன் கூறுகையில்...

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த டூவீலர் தொழிலாளர்கள் புதிய சங்கத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் எங்களுடைய தொழில் கடுமையாக பாதித்துள்ளது. மேலும் கொரோன காலத்திலும் புயல் காலத்திலும் எங்களுடைய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

நாங்கள் எங்கள் சங்கத்தின் கோரிக்கையை பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி இருந்தோம். அதற்கு அப்புறம் தான் எங்களுக்கு ஒரு அங்கீகாரம் நலவாரியம் மூலம் கிடைத்துள்ளது மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுடைய சங்கத்திற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏறிக்கொண்டே போவதால் தற்போது இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் குறைந்த தூரம் தான் வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் வாகனம் தேய்மானம் குறைவாக உள்ளதால், எங்களுக்கு வேலை வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது

பெரிய இருசக்கர வாகன நிறுவனங்கள் கொரோனா காலகட்டத்தில் அதிக அளவில் தமிழக அரசுக்கு நிதிகள் வழங்கினர் அந்த நிதியில் இருந்து எங்களை போன்ற இரு சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளர்களுக்கு ஏதாவது உதவி செய்திருந்தால் கூட எங்களுடைய தொழிலாளர்கள் சிரமமில்லாமல் இருந்திருப்பார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 5000 தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள்.

தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வு உயர்வதால் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மிகுந்த சிரமம் அடைந்துள்ளோம் என கூறினார்

Updated On: 2 May 2022 2:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  4. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  6. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  7. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  8. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  9. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  10. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...