/* */

நெகிழி இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்: சுற்றுச்சூழல்துறை அமைச்சர்

சாகச நிகழ்ச்சிகளில் குறிப்பாக தீ விபத்து ஏற்படும் வகையில் உள்ள சாகச நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படும்

HIGHLIGHTS

நெகிழி இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்: சுற்றுச்சூழல்துறை அமைச்சர்
X

அமைச்சர் மெய்யநாதன் பூங்குடி கீழமுத்துக்காடு இறையூர் தொடையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.திமுக வேட்பாளராக போட்டியிடும் பழனிச்சாமியை ஆதரித்து சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், பூங்குடி, கீழமுத்துக்காடு, இறையூர், தொடையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:இந்த பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை என்னிடத்தில் வைத்துள்ளனர்.தேர்தல் முடிந்த பிறகு இந்த வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றித் தரப்படும்.வீடு இல்லாத அனைவருக்கும் தமிழக முதல்வர் கான்கிரீட் வீடு கட்டித் தர உள்ளார்.இந்த ஆண்டு 2 லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப் பட உள்ளது.மாவட்டத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம்அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:தமிழக முதல்வர் நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பக்கலைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.அடுத்த ஆண்டு தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் ஒரு பாடமாக கற்றுத் தரப்படும்.சிலம்பக்கலை ஆசிரியர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டுள்ளது .தமிழக முதல்வரின் முயற்சியால் தேசிய சிலம்பப் போட்டியில் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது.சிலம்பம் பயிற்சி முறையாக கற்றுத் தரப்படும். சிலம்பக்கலை உள்பட சாகச நிகழ்ச்சிகள் குறிப்பாக தீ விபத்து ஏற்படும் வகையில் உள்ள சாகச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படும்

தமிழக முதல்வர் நெகிழி ஒழிப்பு அதில் மிக முக்கியமாக சட்டசபையில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.படிப்படியாக தமிழகத்தில் நெகிழி இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.நீலகிரி மாவட்டம் தற்போது நெகிழி இல்லாத மாவட்டமாக செயல்பட்டு வருகிறது .அதே போன்று அனைத்து மாவட்டங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி தயாரிக்கும் தொழிற்சாலை கண்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பிரசசார பயணத்தில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் எம், எம் ,அப்துல்லா, திமுக செய்தி தொடர்பாளர் பி.டி. அரசகுமார், திமுக நிர்வாகிகள் எம்,எம், பாலு, பூங்குடி சிவா, சண்முகம், காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், செய்தி தொடர்பாளர் பென்னட் அந்தோணி ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?