/* */

பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை : புதுக்கோட்டை எஸ்.பி நிஷா பார்த்திபன் பேட்டி

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை எஸ்.பி நிஷா பார்த்திபன் பேட்டியில் கூறினார்.

HIGHLIGHTS

பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை : புதுக்கோட்டை எஸ்.பி நிஷா பார்த்திபன் பேட்டி
X

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக  பொறுப்பேற்றுக்கொண்ட நிஷா பார்த்திபன்.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிஷா பார்த்திபன் இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்தது, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவர்கள் திருமணம், பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்கள் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் பிரச்னை என்றால் ஏற்கனவே மாவட்ட காவல்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தங்களுடைய புகார் தெரிவிக்கலாம். அதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கஞ்சா கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

Updated On: 17 Jun 2021 6:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...