/* */

நவ.14 ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்: ஆட்சியர் அறிவிப்பு

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் 14.11.2022 அன்று நடைபெறவுள்ளதாக ஆட்சியக் கவிதாராமு தகவல்

HIGHLIGHTS

நவ.14 ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்: ஆட்சியர் அறிவிப்பு
X

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் 14.11.2022 அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2022-23ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப்பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில்; (பதின்மப் பள்ளிகள் உள்பட) பயின்றுவரும் மாணாக்கர்களுக்கும் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய).

அனைத்துக் கல்லூரிகளில்; (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) பயின்றுவரும் மாணாக்கர்களுக்கும் தனித்தனியே அரசு விதிமுறைகளின்படியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் 14.11.2022 திங்கள்கிழமை புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.

இப்போட்டிகளில்; பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000; இரண்டாம் பரிசாக ரூ.3000; மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பெற உள்ளன. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்; வழங்கபெற உள்ளன. பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் 14.11.2022 முற்பகல் 9.00 மணி தொடங்கியும்;, கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் 14.11.2022 முற்பகல் 9.30 மணி தொடங்கி நடத்தப்பட உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பள்ளிகள், கல்லூரிகளில்; பயிலும் மாணவ மாணவியர் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க முடியும். பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு, குழந்தைகள் தினவிழா, ரோசாவின் ராசா, ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு மற்றும் இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய ஆறு தலைப்புகளும், கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு, இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு மற்றும் அமைதிப்புறா-நேரு ஆகிய 6 தலைப்புகளும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப் பெற்றுள்ளன. போட்டிகளுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடைபெறும் நேரத்தில் மாணாக்கர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்பெறுவர்.

எனவே தரப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணாக்கர்கள் போட்டிகளில் பங்;கேற்க வேண்டும். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணாக்கர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் ஃ கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும்; பெற்று புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவே (04322-228840, 99522 80798) தொடர்பு கொள்ளலாம். இப்பேச்சுப்போட்டிகளில்; புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Nov 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.