/* */

புதுக்கோட்டையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் நண்பருடன் கைது

புதுக்கோட்டையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் நண்பருடன் கைது
X

கைது செய்யப்பட்ட  சுரேஷ்குமார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். (25),புதுக்கோட்டை போஸ் நகர்ப்பகுதியில் அவரது உறவினர் வீட்டிற்கு சுரேஷ்குமார் அடிக்கடி வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது உறவினர் வீட்டு அருகில் வசித்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் சுரேஷ் குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் பல்வேறு தருணங்களில் தனிமையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் தனிமையில் இருக்கும்போது சுரேஷ்குமாரின் ஆலோசனையின் பேரில் அவரது பதினேழு வயது நண்பர் செல்போனில் படம் எடுத்துள்ளார்.

சுரேஷ்குமார் அதனை வைத்து அடிக்கடி மாணவியிடம் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சுதர்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது நபர் சிறுவர் சீர்திருத்த பள்ளி சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 20 Oct 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்