/* */

மக்களவைத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி அவசியமற்றது: சிபிஎம் கருத்து

பிற மாநிலங்களுடன் ஒப்பீட்டளவில் மின் விநியோகம், கல்வி, உணவு உள்ளிட்ட எல்லாவற்றிலும் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது

HIGHLIGHTS

மக்களவைத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி அவசியமற்றது: சிபிஎம் கருத்து
X

கே. பாலகிருஷ்ணன் (பைல் படம்)

மக்களவைத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி அவசியமற்றது. தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமர் என்பதைப் பேசி முடிவு செய்வோம் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.

தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் ஒரே கட்சியுடன் கூட்டணி அமைகிறது. நாடு முழுவதும் நடைபெறும் தேர்தலில் கேரளத்தில் ஓர் அணியும், மேற்கு வங்கத்தில் ஓர் அணியும் அமையும்.

தமிழ்நாடு இருண்டு இருப்பதாக உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் மின்வெட்டால் மருத்துவமனையில் நோயாளர்கள் இறந்த செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பிற மாநிலங்களுடன் ஒப்பீட்டளவில் மின் விநியோகம், கல்வி, உணவு உள்ளிட்ட எல்லாவற்றிலும் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது.

அதேபோல, மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரி வருவாயில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிரித்தளிக்கும் தொகையை உள்துறை அமைச்சர் சாதனையாகச் சொல்கிறார். ஆனால், மதுரையில் பிரதமர் தொடங்கி வைத்த எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டப்படவில்லை.அதேநேரத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பிற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நிதி ஒதுக்குகிறது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நிதி வரவில்லை என்கிறார்கள். அப்படியானாலும் அதையும் கேட்டு வாங்க வேண்டியது மத்திய அரசுதானே, ஏன் முதல்வர் கேட்கவில்லை என்கிறீர்கள்.

சேலம்- சென்னை எட்டு வழிச்சாலைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமீத்ஷா கூறியிருக்கிறார். மக்கள் கேட்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை. மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் எட்டு வழிச்சாலைக்கு நிதி ஒதுக்குவதாகக் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு, மின்வெட்டு எல்லாவற்றுக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். எதிர்ப்பு தெரிவித்திருக் கிறோம். இவற்றுக்காக திமுக தரப்பிலிருந்தும் எங்களை விமர்சித்திருக்கிறார்கள்.கள்ளச்சாராய சாவுகளின்போதும் காவல்துறையின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதையும் முன்பே தெரிவித்திருக்கிறோம். போதைப் பொருள் விவகாரத்தில் யாருக்கு தொடர்பிருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வாங்குகிறார்கள் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. விசாரித்து உண்மை இருப்பின் கண்டிப்பாக கண்டிப்போம். ஆவின் நிறுவனத்தில் சிறார் பணியில் இல்லை என விளக்கமளித்திருக்கிறார்கள். மாநில அரசு என்பது பெரிய நிறுவனம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் நடக்கலாம். இல்லையென யாரும் சொல்ல முடியாது. அவற்றை சரி செய்ய வேண்டும்.

சட்டம்- ஒழுங்கு விவகாரத்திலும் எங்காவது நடைபெறும் சில குற்றங்களுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்ல முடியாது. கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் திமுக அரசில் சட்டம்- ஒழுங்கு நிதானமாகத்தான் இருக்கிறது.சாதிப் பிரச்னையில் கோவிலைப் பூட்டுவது என்பது தற்காலிகத் தீர்வு என்ற அடிப்படையில் சரியாக இருக்கலாம். ஆனால், அது நிரந்தரத் தீர்வல்ல. எல்லாத் தரப்பு மக்களையும் கோவிலுக்குள் செல்ல வைப்பதுதான் அரசின் பணி என்றார் பாலகிருஷ்ணன்.

Updated On: 11 Jun 2023 5:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்