/* */

புதுக்கோட்டையில் கருப்பு பூஞ்சை அறிகுறி இருந்தால் சிகிச்சைக்கு கலெக்டர் அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி தென்பட்டால் , உடனே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரவேண்டும் என்று கலெக்டர் உமாமகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் கருப்பு பூஞ்சை அறிகுறி இருந்தால் சிகிச்சைக்கு கலெக்டர் அழைப்பு
X

கலெக்டர் உமா மஹேஸ்வரி 

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் ஒரு சிலர் முயூகோர்மைக்கோஸிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறும்போது ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்டவர்கள், சர்க்கரை நோய்பாதிப்பு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எச்ஐவி எய்ட்ஸ் போன்ற வைரஸ் தொற்று மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள்.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணிலும், கண்ணைச் சுற்றியும் கடுமையான வலி, காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், ரத்த வாந்தி,மனச்சிதைவு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

எனவே, கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மேற்கொண்ட நோய் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசுமருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 23 May 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...