/* */

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுதுறை ஆண்டு கூட்டம்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுதுறை ஆண்டு கூட்டம்
X

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில்.   வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம்.   நடைபெற்றது கூட்டத்தில் புதுக்கோட்டை தொல்லியல்  ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் கலந்து கொண்டு உரையாற்றினார்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் முதுகலை வரலாற்றுத்துறை ஆண்டு கூட்டம் கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது .

புதுக்கோட்டை மாவட்டக்கல்வெட்டுகளில் உயிரினங்களின் பல்வகைமை பற்றி புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் சிறப்புரை நிகழ்த்தினார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படும் தகவல்கள் இடைக்காலத்தைச்சேர்ந்த சுற்றுச்சூழலையும், உள்ளூர் பகுதியில் காணப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றியும் அறிந்துகொள்ள நேரடி ஆதாரமாக இக்கல்வெட்டுகள் விளங்குவதாகவும்,இதன் மூலமாக கடந்த கால இயற்கை சூழலையும் தற்போதைய இயற்கை சூழலையும் ஒப்புநோக்கும் போது பெருவாரியான உயிரின வளங்களை நாம் இழந்திருப்பதை புரிந்துகொள்ள முடிவதாகவும், கடந்த காலத்தில் உள்ளூரில் இருந்த மரங்கள் , தாவர வகைகளை மீட்டுருவாக்கம் செய்வதன் மூலம் பழமையான இயற்கை சமநிலையை சீர்படுத்த இயலுமென்றும், நமது சூழலுக்கு சற்றும் ஒவ்வாத யூக்கலிப்ட்டஸ் உள்ளிட்ட மரங்களை நாம் முழுவதுமாக கைவிட்டு நமது பண்டைய இயற்கையான உள்ளூர் சிற்றினங்கள் அடங்கிய வனங்களை உருவாக்குவது காலத்தின் தேவை என்றார்.

நிகழ்வில் முனைவர் சரளா, முனைவர்.மாலதி மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக முனைவர் காயத்திரிதேவி வரவேற்புரையாற்றினார். நிறைவில் இறுதியாண்டு மாணவி ஷாலினி நன்றி கூறினார்

Updated On: 22 April 2022 8:44 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்