/* */

புதுக்கோட்டைக்கு வந்த பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா ஜோதி: ஆட்சியர் வரவேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்தடைந்த தொடர் தீபத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பெற்றுக்கொண்டார்

HIGHLIGHTS

புதுக்கோட்டைக்கு வந்த பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா ஜோதி: ஆட்சியர் வரவேற்பு
X

வெற்றி பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் நூற்றாண்டு விழா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை 1922-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது நூற்றாண்டைத் தொட்டு வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றாண்டு கொண்டாட்டங்களை பொது சுகாதாரத் துறை நடத்தி வருகிறது. மேலும் வருகின்ற 10-ந் தேதி சென்னையில் தொடங்கி நூற்றாண்டு ஜோதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு செல்லப்பட்டு கொண்டாடப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற விழாவில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை 1922 முதல் 2022 வரை பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்தடைந்த தொடர் தீபத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பெற்றுக்கொண்டு பொது சுகாதார துறையினரி டம் ஒப்படைத்தார்

இந்த ஜோதியினை தமிழக முழுவதும் கொண்டு செல்வதன் மூலம் ஓர் நூற்றாண்டாக பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை செய்த சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்று திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜோதி பயணம் மேற்கொள்ளப்படுகிறது

மேலும் பொது சுகாதாரத்துறை அதனோடு இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை பாராட்டி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெற்றி பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன

விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேசியதாவது: மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு தமிழகத்திற்கு முன்னோடி மாவட்டமாக புதுக்கோட்டை விளங்கி வருவதாகவும் இதற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் நூற்றாண்டு விழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன், இணை இயக்குனர் ஊரக நகர் பணிகளின் மருத்துவர் ராமு, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குனர் ஊரக நலப் பணிகளின் சகாயமேரி ரீட்டா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Nov 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.