/* */

அரசு உயர் துவக்கப்பள்ளியை திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியை சுற்றுச்சூழல், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், முதன்மை கல்வி அலுவலருடன் ஆய்வு.

HIGHLIGHTS

அரசு உயர் துவக்கப்பள்ளியை திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன்
X

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது 2020- 2021 ஆம் ஆண்டிற்கான பள்ளி சேர்க்கையில் மாணவ மாணவிகள் அதிகரித்து வருகின்றனர். தற்போது பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு தொழில்நுட்ப வசதியுடன் அரசு உயர் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருவதால் மாணவர்கள் அதிக அளவில் தற்போது பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.

ஆனாலும் பள்ளியில் போதிய வகுப்பறைகள் வசதிகள் இல்லாததால் அருகில் உள்ள அரசு அலுவலகத்தை அகற்றிவிட்டு புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும் என பள்ளியின் தலைமையாசிரியார், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமியுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது புதிதாக வகுப்பறைகள் கட்டுவதற்கு பணிகளை மேற்கொள்வதற்கும், பழைய கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டு அதற்கான பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது மற்றும் ஆசிரியர் அரசுத்துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

Updated On: 31 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!