/* */

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை

கல்வி சங்கல்ப பூஜையில் பங்கேற்ற மாணவ, மாணவிகளில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது

HIGHLIGHTS

புதுக்கோட்டை  ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை
X

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு4ம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அரசு பொது தேர்வு ஏழுதும் 10ம் வகுப்பு,பிளஸ்1, பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிபாடு ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கே.மணி குருக்கள் தலைமையில் சிறப்பு வழிபாடுநடந்தது.

கல்வி சங்கல்ப பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபையினர் சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. இதையொட்டி, மாணவ,மாணவிகளுக்கு பேனா, குறிப்பேடுகள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை பாக்கியராஜ், இலக்கியப்பேரவை நிலவைப்பழனியப்பன், கல்வியாளர்கள் மாலதிசெந்தில்வேல் , கணினி ஆசிரியர் சந்திரசேகர், கல்லூரி பேராசிரியர் நாகேஸ்வரன், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் , கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, அனுமன்,திருச்சபையினர், ஆன்மிகநெறியாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது

Updated On: 28 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...