/* */

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் மின்னொளி கபடி போட்டி

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திமுக நகர இளைஞர் அணி சார்பில் மலையப்ப நகரில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் மின்னொளி கபடி போட்டி
X

புதுக்கோட்டை திமுக நகர இளைஞரணி சார்பில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மின்னொளி கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசினை எம்பி அப்துல்லா வழங்கினார்.

மே1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திமுக நகர இளைஞர் அணி மற்றும் அம்பாள் பிரதர்ஸ் கபடி குழு, தெற்கு பிச்சத்தான்பட்டி மலையப்ப நகர் ஊர் பொதுமக்கள் சார்பில் 22 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபடி போட்டி மலையப்பன் நகரில் நடைபெற்றது.

இந்த போட்டியினை திமுக மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா கலந்துகொண்டு கபடி போட்டியை துவக்கி வைத்தார் இந்த கபடி போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் 34 அணிகள் கலந்து கொண்டு விளையாடிய கபடி போட்டியில் முதல் பரிசு 15022 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் கோப்பையை புதுக்கோட்டை மயிலா பட்டி மணிப்புறா அணியினர் கைப்பற்றினர் இரண்டாவது பரிசாக 12022 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் கோப்பையை மலையப்ப நகர் அம்பாள் பிரதர்ஸ் அணியினர் கைப்பற்றினர். மூன்றாம் பரிசாக 10022 ரூபாய் ரொக்க பணம் மற்றும் கோப்பையை விருதுநகர் அணியினர் கைப்பற்றினர்.

மேலும் வெற்றி பெற்ற கபடி அணியினருக்கு திமுக மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா மற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கினர். மேலும் இரவு நேரத்தில் நடைபெற்ற மின்னொளி கபடி போட்டியை காண்பதற்காக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கு மேற்பட்ட கூடிநின்று கபடி போட்டியை கைதட்டி ரசித்தனர்.

Updated On: 2 May 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்