/* */

புதுக்கோட்டை கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் : மாஜி மின்ஸ்டர் கலந்து கொண்டு அசத்தல்

புதுக்கோட்டை மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அசத்தினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் : மாஜி மின்ஸ்டர் கலந்து கொண்டு அசத்தல்
X

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வரவேற்ற இந்நாள் சுகாதாரத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியன்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரி களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா ,சின்னதுரை மற்றும் அதிமுக சார்பில் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்பொழுது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொண்டு எடுத்து வைத்த கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோல் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைகள் முடிந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளவர்களுக்கே வேறு ஏதும் பிற நோய்கள் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும் அதற்காக பிரத்யேகமாக வார்டுகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

கோவிட் தடுப்பூசி போடுவதற்கு கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு தமிழக அரசு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசிடம் இருந்து அதிக அளவில் தடுப்பூசிகளைப் பெற்று அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அனைத்து அமைச்சர்களும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 18 Jun 2021 2:56 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  2. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  3. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  4. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  5. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  6. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  7. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  8. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்