பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?

பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
X

இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் ராமராஜ்.

இந்துக்களிடம் ஒரு தர்மம் உண்டு. அது கால காலத்துக்கும் தொடர்ந்து வந்தது.

தேனி இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் கூறியதாவது:

வாரிசு இல்லாதவர்கள் அல்லது வாரிசுகளுக்கு போதுமான செல்வம் உண்டு, அதிகம் தேவையில்லை என கருதியவர்கள் கூடுதல் செல்வத்தை கோயில்களுக்கும், கோயில் தொடர்பான தர்ம காரியங்களுக்கும் கொடுத்தார்கள். கோயில்கள் இந்தியாவில் பிரமாண்டமாக எழுந்தது இப்படித்தான். இந்துமதம் செழித்தது இப்படித்தான். இதனை முதலில் குழப்பியடித்தது பௌத்தம், சமணம். அவர்கள் இவ்வழியினை அவர்கள் மடங்களுக்கு மாற்றினார்கள். ஆனாலும் இந்துமதம் தன்னை மீட்டு, தன் தர்மத்தை வளர்த்தது.

இந்த நுட்பத்தை ஆப்கானியர்கள் நேரடியாக அழிக்க முயன்றனர். ஆனால் முழு வெற்றி இல்லை. பிரிட்டிசார் தான் இந்து தர்மத்தை நூதனமாக உடைத்து, வாரிசற்றவர் செல்வமும் சொத்தும் இந்து கோவிலுக்கு அல்ல அரசுக்கு என மாற்றினார்கள்.

இதுதான் ஜான்சிராணி , வேலுநாச்சியார் போன்றோரின் போர்களுக்கு காரணமாயிற்று. ஆளில்லா தீவுகளெல்லாம் தங்களுக்கு என்பது போல வாரிசில்லா சொத்துக்களும் எங்களுக்கே என பிரிட்டிசாரின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை அது.

அதுதான் இங்கே இந்து தர்மத்தினை அழிக்கும் முதல் அடிக்கல்லானது. கூடவே நிலத்தை அளக்கின்றேன் என இந்துகோவில் நிலங்களை அளந்து, அப்படியே அவற்றில் பலவகை நிலம் உருவாக்கி எல்லா குழப்பங்களையும் செய்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள்.

கோயில் நிலங்கள் கோவிலுக்கு. அதை யாரும் பெற்று குத்தகைக்கு விவசாயம் செய்யலாம். அதை எந்த சாதியும் சொந்தம் கொண்டாட முடியாது எனும்போது, இதர வகை பிரச்னைக்குரிய நிலங்கள் எதற்கு தோன்றின என்றால் இப்படித்தான்.

இந்த பிரிட்டிஷ் ஆட்சியின் தந்திரம் வாரிசில்லாதவர் சொத்து கோயிலுக்கு, எல்லா மக்களின் பொது சொத்தும் இந்து கோயில்களுக்கு என இருந்ததை உடைத்து அரசுக்கு அதாவது பிரிட்டிசாருக்கு என மாற்றிற்று.

அப்படி பெற்ற சொத்துக்களை கொண்டு தான் மதமாற்றம், மதமாற்ற கல்வி என எல்லாம் செய்தார்கள். அதைத்தான் மீண்டும் கொண்டுவர நினைக்கின்றார் ராகுல்காந்தி. ஆம், இந்த நாட்டின் தர்மத்தை குலைத்துபோட்ட பிரிட்டிசாரின் நயவஞ்சக திட்டத்தை மீண்டும் தூசு தட்டுகின்றது காங்கிரஸ். அதன் கோரமுகம் இப்போது தெரிகின்றது.

இந்துதர்மத்தை மோடி மீள கொண்டுவர முனையும் நேரம். பாஜகவும் தேசாபிமானிகளும் தேர்தல் போரில் சரியாக இருக்கின்றார்கள். இந்துக்களாக வாழவும், நிலைக்கவும் எக்காலமும் போர் செய்த பூமி இது. இங்கு தேர்தல் போர் ஒரு பொருட்டே அல்ல. இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி