ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!

ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
X
புதுப்பாக்கம் ஊராட்சியில் ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜிஎப்சி குளோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் அருமந்தை ஊராட்சி புதுபாக்கம் பகுதியில் உள்ள ஜிஎப்சி குளோபல் பப்ளிக் பள்ளியில் 2023-2024-ம் ஆண்டிற்கான விளையாட்டு தினம் நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் கே.என்.ரங்கநாதன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் முதல்வர் இந்துமதி அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் சேர்மன் மீராபாய், பள்ளியின் இயக்குனர்கள் கார்த்திகேயன், சந்தோஷனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளியின் சார்பில் விளையாட்டு ஜோதி ஏற்றப்பட்டு பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நகைச்சுவை நடிகர் டாக்டர் தாமு கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிதல், பெற்றோர்களை மதித்தல், ஆசிரியர்களை மதித்தல் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து பள்ளியின் நிர்வாகிகள் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கினர். இவ்விழாவிற்கு பள்ளியின் சகஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சினை சிறப்பித்தனர். முடிவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முக்கிய அம்சங்கள்:

ஜிஎப்சி குளோபல் பப்ளிக் பள்ளியில் 2023-2024-ம் ஆண்டிற்கான விளையாட்டு தினம் நடைபெற்றது.

விளையாட்டு ஜோதி ஏற்றப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

திரைப்பட நகைச்சுவை நடிகர் டாக்டர் தாமு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பள்ளியின் சகஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள் உட்பட பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!