/* */

கல்வி வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புகார் குழு அமைக்க வேண்டும்

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புகார் குழு அமைக்க வேண்டும். இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

HIGHLIGHTS

கல்வி வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புகார் குழு அமைக்க வேண்டும்
X

பைல் படம்

கல்வி வாளகங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உள் புகா ர்குழு அமைக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அ.சந்தோஷ்குமார், செயலாளர் சா.ஜனார்த்தனன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுக்கோட்டை கல்லூரி ஒன்றில் கௌரவ விரிவுரையாளராக ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 18 வயதுக்கு உட்பட்ட மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாணவியின் தாய் இறந்துவிட்டார். தந்தை உடன் இல்லாத சூழலில் காப்பாளருடன் வசித்து வருகிறார். காப்பாளர் இப்பிரச்னையை அலட்சியப்படுத்தியதால், செய்யவதறியாது தவித்த மாணவிக்காக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்து, தங்களது பாதுகாப்பில் வைத்திருந்தது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த விசாரணைக்குழு மாணவியை காப்பாளரின் வீட்டில் 15 நாட்கள் இருக்க வலியுறுத்தியது. இதனை மாணவி ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, மாணவியை காப்பகத்தில் ஒப்படைக்கிறோம் என அழைத்துச் சென்றனர். ஆனால், உறுதியளித்ததற்கு மாறாக மாணவி காப்பாளரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனால், காப்பாளர் தரப்பும், பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட கௌரவ விரிவுரையாளரின் தரப்பும் சேர்ந்து மாணவியை மிரட்டி சித்திரவதைக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.

இந்நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் மீது சிலர் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். கல்வி வளாகங்களில் பாலியல் குற்றங்களை தடுத்திடவும், பாலின சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து போராடிவரும் இந்திய மாணவர் சங்கத்தின் மீது தவறான தகவல்களை பரப்பும் பாலியல் குற்றவாளிகளின் ஆதரவாளர்களையும், அதற்கு துணைபோகும் அதிகாரிகளையும் இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கல்வி நிலையங்களில் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தயக்கமின்றித் தெரியப்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும்.

இதற்காக, அனைத்து கல்வி வளாகங்களிலும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு எதிரான சட்டப்படியான உள் புகார் குழுக்களை அமைத்து கல்வி நிலைய பாலியல் துன்புறுத்தலை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 21 Dec 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்