/* */

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்: எம்பி அப்துல்லாவிடம் மனு

புதுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கம்- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகிய இரு சங்கங்களின் நிர்வாகிகள் மனு அளித்தனர்

HIGHLIGHTS

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்:  எம்பி அப்துல்லாவிடம் மனு
X

புதுக்கோட்டையில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என.    மாநிலங்களவை எம்பி  அப்துல்லாவிடம் மனு அளித்த சங்க  நிர்வாகிகள்

புதுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகிய இரு சங்கங்களின் நிர்வாகிகள் இன்று ரோஜா இல்லத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவிடம், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், புதுக்கோட்டை கீழராஜ வீதியில் குறுகிய சாலைகள் உள்ளதால் போக்குவரத்தினை சரி செய்வதற்காக மாற்று வழிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் .புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் மினி பேருந்து இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதேபோல், ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதி குடிநீர், கேண்டின் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலங்களவை எம்பி அப்துல்லாவிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வில், ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.சிவக்குமார் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ், சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன், நிர்வாகிகள் இப்ராகிம் பாபு, க.நைனாமுகமது உள்பட பலர் உடனிருந்தனர்.

.

Updated On: 17 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’