/* */

பெரம்பலூரில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற டெங்கு கொசு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூரில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற டெங்கு கொசு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற டெங்கு கொசு விழிப்புணர்வு பேரணி
X

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு கொசுவினால் ஏற்படும் தீமைகளை விளக்கியும், டெங்கு வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின் படி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி சார்பில் 62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு துவங்கிய இந்த பேரணிக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், கல்லூரி முதல்வர் நெப்போலியன்,துணை முதல்வர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலெக்டர் கற்பகம் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பாலக்கரையில் ஆரம்பித்து, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம் ,காமராஜ் ஆர்ச் வரை சென்று ரோவர் மருந்தியல் கல்லூரியில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ,மாணவிகள் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி சென்று கோஷமிட்டபடி சென்றனர்.

இந்த பேரணி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. பேரணியில் தாசில்தார் சரவணன் மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Nov 2023 5:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க