/* */

நாமக்கல் நகராட்சியுடன் இணைந்த பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம்

நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட மற்றும் விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நகராட்சிக் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியுடன் இணைந்த பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம்
X

நகராட்சியுடன் இணைந்த பகுதிகளுக்கு ரூ.172.49 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்

நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட மற்றும் விடுபட்ட பகுதியில், ரூ. 172.49 கோடியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கு அனுமதி அளித்து நகராட்சிக் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகராட்சிக் கூட்ட அரங்கில், நகர்மன்றக் கூட்டம் நகர்மன்ற தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூபதி, கமிஷனர் சென்னுகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நாமக்கல் நகராட்சி, தினசரி வாரச்சந்தை வளாகத்தில், தெற்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள விற்பனை கூடத்துக்கு, 31.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பேவர் பிளாக் தளம் அமைத்து, அனுகுசாலை அமைக்க கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட மற்றும் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில், பாதாள சக்கடை அமைக்கும் பணி, ரூ. 313.38 கோடி மதிப்பில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக பாதாள சாக்கடை திட்டப்பணியை ரூ. 172.49 கோடி மதிப்பில் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.

தற்போது, பாதாள சாக்கடை திட்டத்தை 5 ஆண்டுக்கு இயக்கம் மற்றும் பாராமரிப்பு பணியை மேற்கொள்ள ரூ. 22.49 கோடி, நகராட்சி நிதியில் இருந்து மேற்கொள்வது என்பவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Feb 2024 10:45 AM GMT

Related News