/* */

போலீஸ் தேர்வில் இட ஒதுக்கீடு: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

இதில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

போலீஸ் தேர்வில் இட  ஒதுக்கீடு:  முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.

போலீஸ் தேர்வில் இட ஒதுக்கீடு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

போலீஸ் பேட்டித்தேர்வில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணபிக்கலாம். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை) பெண்கள் 780 காலிப் பணியிடங்கள், இரண்டாம் நிலைக் காவலர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 1,819 காலிப் பணியிடங்கள், சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர் ஆண்கள் 83, பெண்கள் 3 காலிப் பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர் 674 காலி ப்பணியிடங்கள் என மொத்தம் 3,359 காலி பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பிட 47 வயது மேற்படாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எனவே, நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 1.7.2023 அன்று 47 வயது பூர்த்தி அடையாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் 1.7.2023-க்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள், இப்பணியிடங்களுக்கு 17.9.2023-க்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விவரத்தை, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற வெப்சைட் முகவரியில் லாக் ஆன் செய்து பெறலாம். மேலும், நாமக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குநரை நேரில் அணுகி மேலும் தகவல் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Aug 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு