/* */

நாமக்கல் புதிய மருத்துவக்கல்லூரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

நாமக்கல்லில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் புதிய மருத்துவக்கல்லூரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
X

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியை,  புதுடில்லியில் இருந்து பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, மருத்துவக்கல்லூரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி வைத்தார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, சரஸ்வதி ஆகியோர்.

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை அமைக்க, மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் மத்திய மற்றும் மாநில அரசு நிதியில் இருந்து, ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கொரோனா ஊரடங்கு நேரத்திலும், வடமாநில தொழிலாளர்களைக் கொண்டு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாக அலுவலகம், வகுப்பறைகள், லேபாராட்டரிகள், டீன் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள், ஆடிட்டோரியம் பேன்றவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இக்கல்லூரியில் 150 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கான சேர்க்கை வழங்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

புதிய மருத்துவக்கல்லூரியை இன்று புதுடில்லியில் இருந்தவாறே, பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய சுகதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாலியா, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, மொடக்குறிச்சி சரஸ்வதி, மருத்துவக்கல்லூரி டீன் அலுவலர் சாந்தா அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

Updated On: 12 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?