/* */

நுகர்வோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்: கலெக்டர் அறிவுரை

தேசிய நுகர்வோர் தின விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு நுகர்வோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

HIGHLIGHTS

நுகர்வோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்: கலெக்டர் அறிவுரை
X

உலக நுகர்வோர் தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.

நாமக்கல், மே. 4-

நுகர்வோர்கள் தங்கள் உரிமையை தெரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பள்ளி, கல்லூரிகளில் ஏற்கனவே ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி விழாவில் கலெக்டர் பேசியதாவது:

ஒவ்வொரு பொருளையும் விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் நுகர்வோரே. இன்னமும் நமக்கு தேவையான பொருட்களை சரியான முறையில் கவனித்து வாங்காமலும், பட்டியல்களை சரிபார்க்காமலும் வாங்க மறந்துவிடுகிறோம். இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் நுகர்வோர் உரிமைகளை காத்திடவுடம், நுகர்வோர் உரிமைகளை நிலைநாட்டவும் 1962 ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி உலக நுகர்வோர் தினம் தோற்றுவிக்கப்பட்டது.

பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களாகிய நமக்குரிய உரிமைகளையும், கடைமைகளையும் நாம் முழுமையாக அறிந்து கொள்வதோடு, இதனை மற்றவர்களும் அறிந்துகொண்டு பயன்பெறுகின்ற வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும்போது பதிவுச்சான்று, லைசென்ஸ் பெற்ற கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும். அதன் உண்மை தன்மையை அறிந்து, அப்பொருளின் தரம், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் முகவரி போன்றவை சரியாக உள்ளதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும். வாங்குகின்ற பொருட்களுக்கான விலை பட்டியலை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும். நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது ஏதேனும் குறைபாடுகள் மற்றும் சேவை குறைபாடு இருந்தால் மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யலாம். வாங்கும் பொருள்களில் தரமற்ற உணவு பொருள் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொருட்கள் வாங்குவதில் நுகர்வோர்களாகிய நமக்குரிய உரிமைகளையும், கடைமைகளையும் முழுமையாக அறிந்து அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண், தமிழ்நாடு, பாண்டிச்சேரி நூகர்வோர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 4 May 2023 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
  2. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  3. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  4. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  9. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  10. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!