/* */

காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்

நாமக்கல் மாவட்டம், காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

HIGHLIGHTS

காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்
X

காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் ஸ்ரேயா சிங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாவட்ட நிர்வாகம் மூலம் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள், முடிவுற்ற திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியர் ஸ்ரேயா சிங் அதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து புத்தகங்களை, படிக்கச் சொல்லி அவர் ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகள் ஆங்கில் பாடத்தினை சரளமாக வாசிப்பதை பார்வையிட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அதன் பொருள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், பள்ளியில் பராமரிப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளிடம் ஆட்சியர் ஸ்ரேயா சிங் கலந்துரையாடினார். அப்போது, நன்கு கல்வி பயின்று ஒவ்வொருவரும் கற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை அறிந்து, அனைத்து மாணவ மாணவிகளும் நல்ல முறையில் உயர் கல்வி பயில வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட முக்கிய அதிகாரிகள், காதப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 15 Feb 2023 5:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  2. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  3. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  5. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  6. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  9. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  10. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்