/* */

புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ராமலிங்கம் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ராமலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ராமலிங்கம் ஆய்வு
X

புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான மருந்து பெட்டங்களை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மக்களைத்தேடி எம்எல்ஏ என்ற திட்டத்தின் கீழ், எம்எல்ஏ ராமலிங்கம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதையொட்டி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் நவணி, தாத்தையங்கார்பட்டி, காரைக்குறிச்சி புதூர் முதல் செல்லப்பட்டி வரை உள்ள கிராமங்களில், எம்எல்ஏ ராமலிங்கம் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றார்.

தொடர்ந்து, புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவ அலுவலர் சுதாவிடம், நோயாளிகளின் வருகை, வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, மருத்துவ பணியாளரிடம் மருந்து பெட்டகங்களை வழங்கினார். ஒன்றிய திமுக செயலாளர் கவுதம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  7. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  8. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  9. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்