/* */

நாடு முழுவதும் மக்காச்சோளம் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைய வாய்ப்பு

நாடு முழுவதும் மக்காச்சோளம் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாடு முழுவதும் மக்காச்சோளம் உற்பத்தி  அதிகரிப்பால் விலை குறைய வாய்ப்பு
X

நாடு முழுவதும் மக்காச்சோளத்த்தின் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கான தீவன உற்பத்தியில் மக்காச்சோளத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். ஒரு டன் முட்டைக்கோழி தீவனத்தில் சுமார் 400 கிலோவும், ஒரு டன் பிராய்லர் கோழி தீவனத்தில் சுமார் 600 கிலோவும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோளம் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், மக்காச்சோளத்தின் விலை உயர்ந்து பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே ரூ.2 ஆயிரம் ஆக இருந்த ஒரு மூட்டை மக்காச்சோளத்தின் விலை தற்போது ரூ.2,200 முதல் 2,300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல பண்ணையாளர்கள் மக்காச்சோளத்திற்கு மாற்றாக சோளம், கம்பு போன்றவற்றை தீவனத்தில் சேர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பருமழை சீராக பெய்துள்ளதால் மக்காச்சோளத்தின் உற்பத்தி அதிகரித்து, மக்காச்சோளத்தின் விலை குறையும் என்று பண்ணையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மக்காச்சோளத்திற்கான விலை முன் அறிவிப்பை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் 9.89 மில்லியன் எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, 31 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து சுமார் 0.36 மில்லியன் டன்கள் மக்காச்சோளம் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தான் மற்றும் பூட்டான் ஆகியவை மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளாகும்.

தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டில் 0.4 மில்லியன் எக்டர் பரப்பளவில், 256 மில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சேலம், திண்டுக்கல் நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர். விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. வர்த்தக மூலங்களின் அடிப்படையில், மக்காச்சோளம் அதிகமாக பயிரிடப்படும் மாநிலங்களில் இந்த ஆண்டு பயிரின் நிலைமை சீராக இருக்கிறது. கறிக்கோழி மற்றும் முட்டைக் கோழி வளர்ப்பின் தற்போதைய நிலவரப்பட்டி, மக்காச்சோளத்தின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மக்காச்சோளம் ஏற்றுமதியைப் பொறுத்து அதன் விலை மாறுபட வாய்ப்பு உள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் மக்காச்சோளத்தின் மகசூலில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இருக்கும் என நம்பப்படுகிறது.

வேளாண் பல்கலைக்கழகத்தின் விலைமுன்னறிவிப்பு திட்டம் கடந்த 27 ஆண்டுகளாக, உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் நிலவிய மக்காச்சோளத்தின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளின் அடிப்படையில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இனி வரும் மாதங்களில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை 100 கிலோ குவிண்டாலுக்கு ரூ.1900 முதல் ரூ. 2000 ஆக இருக்கும். எனவே, விவசாயிகள் இந்த ஆலோசனையின் அடிப்படையில் தங்களின் தேவைக்கேற்ப மக்கச்சோளம் கொள்முதல் செய்யும்முடிவை மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தை 0422-2431405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 23 Nov 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு