/* */

ஜேடர்பாளையம் பகுதியில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

ஜேடர்பாளையம் பகுதியில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் பகுதியில் வன்முறை சம்பவங்களை  கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
X

மாநில விவசாயிகள் சங்க தலைவர் நாமக்கல் வேலுசாமி

ஜேடர்பாளையம் பகுதியில் இனி வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல், மாவட்டம் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 8 மாதங்களாக சட்ட விரோதமாக மர்ம ஆசாமிகள், இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் கரும்பு, வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை வெட்டி சாய்த்து அழித்து வருகின்றனர். மேலும், வெல்லம் தயாரிப்பு ஆலைகள், விவசாயிகளின் டிராக்டர்கள், வீடுகள் போன்றவற்றிற்கு தீ வைத்து சேதப்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பையும் மீறி, இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த 11ம் தேதி ஜேடர்பாளையம் அருகே, உள்ள வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோமணி என்ற சுப்பிரமணி (42) என்பவருக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தில் இருந்த, பயிரிட்டு 10 மாதங்கள் ஆன 5,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், இரவு நேரத்தில் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டன. இது போன்ற தொடர் வன்முறை சம்பவங்கள், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தையும், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளும், தொழிலாளர்களும் வீட்டை விட்டு விவசாய தோட்டங்களுக்கு செல்லவே பயப்படுகின்றனர்.

தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் மற்றும் உளவுத்துறையினர், அசாம்பாவித செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜேடர்பாளையம் பகுதியில் நடைபெறும் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனி நடைபெறாமல் கட்டுப்படுத்த, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் நடைபெறும் திமுக அரசு, ஆட்சிப்பொறுப்பை ராஜினாமா செய்து பதவி விலக வேண்டும்.

இவ்வாறுஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 13 Nov 2023 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு