/* */

சேந்தமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ரோடுகள்: கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

சேந்தமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள ரோடுகளின் தரம் குறித்து, கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை  ரோடுகள்: கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
X

சேந்தமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள ரோடுகளை, சேலம் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு தரத்தினை ஆய்வு செய்தார்.

சேந்தமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள, ரோடுகளின் தரம் குறித்து, கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை உட்கோட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை பணிகள் மற்றும் சிறுபாலங்கள் பணிகளை, சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த பணியில், சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் புதிதாக போடப்பட்ட சாலையின் தரம் மற்றும் கணத்தின் அளவுகளையும் ஆய்வு செய்தார். மேலும் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் மலைப்பாதை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டார். வனத்துறையிடமிருந்து திருத்திய நேர்பாட்டிற்கான அனுமதியை விரைந்து பெற்று பணியினை செயல்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

மேலும், தமிழக அரசின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, சாலை பராமரிப்பு குறித்து நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், காந்திபுரம் - காரவள்ளி ரோட்ரோரங்களில் பலன் தரும் பழ மரக்கன்றுகளை அவர் நட்டார். நிகழ்ச்சியில், கோட்டப் பொறியாளர் துரை, சேந்தமங்கலம் உதவிக் கோட்டப் பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவிப் பொறியாளர் பிரனேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 24 Jan 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!