/* */

நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து நாளை நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம்

நாமக்கல்லில் நாளை 19ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து நாளை நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) நாட்டுக்கோழி வளர்ப்பிற்கேற்ற தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இலவச பயிற்சி நாளை 19ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இப்பயிற்சியில் புறக்கடை மற்றும் தீவிர முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் நுட்பங்கள், நாட்டுக்கோழி இனங்கள், நவீன கோழி வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள், குஞ்சு பொரிக்கும் விதம், இன்குபேட்டர்களின் பயன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், நாட்டுக்கோழிகளைத் தாக்கும் நோய்கள், அறிகுறிகள் அவற்றை தடுக்கும் முறைகள் மற்றும் நாட்டுக்கோழிகளை பராமரிக்கும் முறைகள் குறித்தும் விரிவாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ, 04286 266345, 266650 என்ற போன் மூலமாகவோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று பயிற்சி மைய தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.

Updated On: 18 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...