/* */

நாமக்கல் நகராட்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் ஆய்வு

நாமக்கல் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் ஆய்வு
X

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட அன்பு நகரில் நடைபெற்று வரும், பூங்கா மேம்பாட்டு திட்டப்பணிகளை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் நகராட்சி பகுதியில், தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் நகராட்சிகுட்பட்ட, சேலம் ரோடு, அன்பு நகர், பகுதி 1-ல், தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஒப்பந்தகால அளவு ஆகியவைகள் குறித்து, நகராட்சி பொறியாளாரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அன்பு நகர் பகுதி-3 ல், தமிழக அரசின், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு, பணியின் தரத்தினை ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். தாலுகா அலுவலகத்தில் பராமாரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை அவர் பார்வையிட்டார். மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இண்டர்நெட் வழியாக, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யப்பட்ட பல்வேறு சான்றிதழ்கள் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

அப்போது, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களை அவர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது நாமக்கல் நகராட்சி என்ஜினீயர் சுகுமார், திருச்செங்கோடு தாசில்தார் பச்சைமுத்து உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 19 March 2023 9:58 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  2. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  3. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  4. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  5. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?