ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி: மே.8ல் துவக்கம்

Erode news- ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.
Erode news, Erode news today- ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், சணல் பை , பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரித்தல் குறித்த இலவசப் பயிற்சி வருகிற மே 8ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் சார்பில், சணல் பை , பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி வரும் மே 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை உணவு உள்பட அனைத்தும் இலவசம் பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.
இதற்கான முன்பதிவு, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி வளாகம் 2ஆவது தளம், கொல்லம்பாளையம் புறவழிச் சாலை, ஈரோடு 638002 எனும் முகவரியில் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு 0424-2400338, 8778323213, 7200650604 ஆகிய கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu