/* */

குமாரபாளையத்தில் குடியரசு தினவிழா

குமாரபாளையத்தில் பல்வேறு அலுவலகங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில்  குடியரசு தினவிழா
X

74வது குடியரசு தினவிழாவையொட்டி குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் விஜய்கண்ணன் தேசியக்கொடிஏற்றி வைத்தார்.

74வது குடியரசு தினவிழாவையொட்டி குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் விஜய்கண்ணன் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஓ. ராமமூர்த்தி, தி.மு.க. செயலர் செல்வம், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சித்ரா, மனோகரன் உள்பட கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர்.

குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாலதி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் நடராஜன், நாகப்பன், லோகநாதன், ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரவி, தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல், அரசு மருத்துவமனையில் டாக்டர் பாரதி, தீயணைப்பு படை அலுவலகத்தில் நிலைய அலுவலர் தண்டபாணி, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நகர தலைவர் ஜானகிராமன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பி.டி.ஏ.தலைவர் வெங்கடேசன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சிவகாமி,

சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி, சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சண்முகம், வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை செல்வி, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை கவுசல்யாமணி, நாராயணநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பாரதி ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.

ஜே.கே.கே.சுந்தரம் நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் வாழும் காந்தி என்ற விருது பெற்ற ஈரோடு சண்முகம் பங்கேற்று தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியை புஸ்பலதா, கவுன்சிலர் கதிரவன், பொதுநல ஆர்வலர்கள் உஷா, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குடியரசு நாள் குறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது: 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவு கூற ஜனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டமாக்க அவையில் சமர்ப்பித்தது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்.தலைநகர் தில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

மாநிலத் தலைநகரங்களில்மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.




படவிளக்கம் :


படவிளக்கம் :

74வது குடியரசு தினவிழாவையொட்டி குமாரபாளையம் நீதி மன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாலதி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

படவிளக்கம் :

74வது குடியரசு தினவிழாவையொட்டி குமாரபாளையம்

ஜே.கே.கே.சுந்தரம் நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் வாழும் காந்தி என்ற விருது பெற்ற ஈரோடு சண்முகம் பங்கேற்று தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.


Updated On: 26 Jan 2023 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!