/* */

டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நாகையில் நெகிழ வைத்த திருமண காட்சி

டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நாகையில் நடந்த திருமண திருமண நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ வைத்தது.

HIGHLIGHTS

டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நாகையில் நெகிழ வைத்த திருமண காட்சி
X

மணமக்களுக்கு பரிசு வழங்கினார் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமி பேரலையில் 6065 பேர் உயிரிழந்து நாகை மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக பேரிடர் பாதிப்பில் தாயையும், தந்தையையும் ஏராளமான குழந்தைகள் இழந்தனர். அப்போது நாகையில் அரசால் துவங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் 99 தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள். அதில் 9 மாத குழந்தையான சௌமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகிய பச்சிளம் குழந்தைகளை அப்போதைய நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த தற்போதைய தமிழக சுகாதாரத்துறை செயலராக செயல்பட்டு வரும் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார்.


சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும், ராதாகிருஷ்ணன் மாதாமாதம் நாகை வந்து குழந்தைகளோடு நேரங்களை செலவிட்டு அவர்களுடைய கல்வியில் மட்டுமின்றி, அவர்களுடைய வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பை செலுத்தி பராமரித்து வந்தார். தொடர்ந்து சௌமியா மற்றும் மீனா ஆகியோர் 18 வயதை கடந்த பின்பு நாகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும் மலர்விழி மற்றும் மணிவண்ணன் தம்பதியினர் அவர்களை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் சௌமியா திருமணம் நாகையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நாகை ஆபீசர்ஸ் கிளப்பில் நடந்த திருமண விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், நாகை எஸ்.பி. ஜவஹர், நாகையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவரம் தெரிந்த பல குழந்தைகள் தாய் தந்தையரை இழந்த நிலையில் மீட்கப் பட்டாலும், சொந்தம் பந்தம் என எதுவும் அறியா பச்சிளம் குழந்தைகளாக மீட்டெடுத்த சௌமியா மற்றும் மீனா ஆகியோருடன் ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சியோடு திருமண விழாவில் நேரத்தை செலவிட்டார்.

சுனாமி பேரலை பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற ராதாகிருஷ்ணன் பாலத்தின் அருகே அழுதுகொண்டு இருந்த குழந்தைதான் சௌமியா என பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டு பேசிய செயலர் ராதாகிருஷ்ணன், மனித நேயம் மட்டும்தான் இதுநாள் வரை நிலைத்து நிற்கிறது என்று கூறினார். குழந்தையாக மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்த நிலையான திருமணம் வரை செய்து வைத்து அழகு பார்த்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மலர்விழி, மணிவண்ணன் தம்பதி குடும்பத்திற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Updated On: 7 Feb 2022 3:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!