/* */

நாகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் நீக்கம்

நாகை வாக்காளர் பட்டியலில் இருந்து அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் நீக்கப்பட்டதற்கு காரணமான அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நாகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் நீக்கம்
X

பெயர் நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார்.

நாகை நகராட்சி 4,வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அமிர்தவல்லி நகராட்சி அலவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். அப்போது வேட்புமனுவை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்காளர் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இல்லை என்றும் கடந்த 5.01.2022 அன்று நீக்கல் ஆகியுள்ளதாக கூறி உள்ளார்.

இவ்விவகாரம் நேற்று நாகையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தலுக்காக 4,வது வார்டு சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர் தவறு செய்தமைக்காக நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் பின்னர் 4,வது வார்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமிர்தவல்லி பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அந்த வார்டில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாகையில் நீக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் மீண்டும் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த விவகாரத்தில் 4-வது வார்டு தி.மு.க.வினருக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Updated On: 5 Feb 2022 2:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  4. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  5. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  7. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  8. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  10. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...