/* */

நாகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வினியோகம்

வருகின்ற 12 ஆம் தேதி வரை 2 லட்சத்து 15 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தகவல் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நாகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வினியோகம்
X

நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் முதலமைச்சரால் இன்று துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாகையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. நாகை மாவட்டம் முழுவதும் வருகின்ற 12 ஆம் தேதி வரை 2 லட்சத்து 15 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர், கெளதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 4 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  5. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  6. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  8. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  10. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்