இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன் தெரியுமா?
திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி.
திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து இந்திய பணத்தாளில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன் தெரியுமா? என்கிற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது .
புத்தூர் கிளை நூலக நூலகர் துவக்க உரையாற்றினார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் இந்திய பணத்தாளில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன் தெரியுமா என்பது குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது:-
நட்சத்திரம் (*) சின்னத்துடன் உள்ள இந்திய பணத்தாள்கள் குறைபாடுள்ள அச்சிடப்பட்ட ரூபாய் பணத்தாள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் ரூபாய்பணத்தாள் ஆகும். பணத்தாள் எண் பேனலில் நட்சத்திரம் சின்னம் அச்சிடப்பட்டிருக்கும். ஒரு நட்சத்திரம் குறியீட்டைக் கொண்ட பணத்தாள், வேறு எந்த சட்டப்பூர்வ ரூபாய் பணத்தாளுக்கும் ஒத்ததாக இருக்கும், எண் பலகத்தில் முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையில் ஒரு நட்சத்திரம் சேர்க்கப்படுவதைத் தவிர. நட்சத்திரம் என்பது மாற்றப்பட்ட/ மறுபதிப்பு செய்யப்பட்ட ரூபாய் பணத்தாள் என்பதை அடையாளங்காட்டியாகும்.
ரூபாய் பணத்தாள்கள் ஒவ்வொன்றும் எண்கள் மற்றும் எழுத்துகள் அடங்கிய முன்னொட்டுடன் ஒரு தனித்துவமான வரிசை எண்ணைக் கொண்டுள்ளது. ரூபாய் பணத்தாள்கள் 100 துண்டுகள் கொண்ட பாக்கெட்டுகளில் வெளியிடப்படுகின்றன. 100 துண்டுகள் வரிசையாக எண்ணப்பட்ட ரூபாய் பணத்தாள்களின் பாக்கெட்டில் குறைபாடுள்ள அச்சிடப்பட்ட ரூபாய் பணத்தாள்களை மாற்றுவதற்கு "ஸ்டார் சீரிஸ்" எண்ணும் முறையை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நாணயங்கள் சேகரிப்பாளர்கள் லட்சுமி நாராயணன், சந்திரசேகரன், வரலாற்று துறை மாணவர் அரிஷ்டோ உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu