/* */

நாகையில் பட்டப்பகலில் 10 பவுன் தங்க நகை திருடி சென்ற இளைஞரால் பரபரப்பு

நாகையில் நகை வாங்குவதுபோல் நடித்து பட்டப்பகலில் 10 பவுன் தங்க செயினை திருடி சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நாகையில் பட்டப்பகலில் 10 பவுன் தங்க நகை திருடி சென்ற இளைஞரால் பரபரப்பு
X

திருட்டு நடைபெற்ற நகை கடை.

நாகப்பட்டினம் நாணயக்காரதெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்க நகை கடைகள் உள்ளன. இதில் கதிரவன் என்பவருக்கு சொந்தமான திவ்யா ஜுவல்லரிக்கு வந்த இளைஞர் ஒருவர் தங்க செயின் வேண்டும் என்றும் அதனை காட்டுங்கள் என கடைக்காரரிடம் கூறியுள்ளார். பின்னர் கடை உரிமையாளர், செயின் மாடலை எடுத்து காட்டிக் கொண்டிருந்த போது, அந்த இளைஞர் அருகிலிருந்த மோதிரத்தை எடுத்து காட்டும்படியும் கூறியுள்ளார்.

அப்போது கடை உரிமையாளர் அசந்த நேரத்தில், 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 10,பவுன் தங்க செயினை திருடிக்கொண்டு அந்த இளைஞர் தலைதெறிக்க வீதியில் இறங்கி ஓடியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் சத்தம் போட்டுக்கொண்டு இளைஞரை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த திருடனை பிடிக்க முடியவில்லை.

திருட்டு சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளர் கதிரவன், நாகை நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனிடையே நாகை நாணயக்காரதெரு நகைக்கடையில் இருந்து மர்ம நபர் ஒருவர் நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்த காட்சி அருகிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.


இந்த காட்சிகளை கைப்பற்றியுள்ள நாகை போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகையில் நகைக்கடையில் இருந்து நகைகளை எடுத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nagai 4 laks gold theft cctv.

Updated On: 24 Nov 2021 3:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  9. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  10. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...