/* */

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சுற்றுலா ஸ்தலங்கள்

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சுற்றுலா ஸ்தலங்கள்
X

முழு ஊரடங்கால் நாகை நகரமே வெறிச்சோடியது.

கொரோனா பரவல் காரணமாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. நாகை பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, மருத்துவமனை சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகள் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமான வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா உள்ளிட்டவைகள் பக்தர்கள் கூட்டமின்றி காணப்பட்டது. ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள வாஞ்சூர், கானூர், அருந்தவன்புலம், செங்காந்தலை, சேஷமூலை, மானாம்பெட்டை, வால்மங்கலம் உள்ளிட்ட 7 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 16 Jan 2022 7:48 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது