/* */

நாகூர் ஆண்டவர் தர்காவில் அ.தி.மு.க.அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வழிபாடு

நாகூர் ஆண்டவர் தர்காவில் அ.தி.மு.க.அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வழிபாடு நடத்தினார்.

HIGHLIGHTS

நாகூர் ஆண்டவர் தர்காவில் அ.தி.மு.க.அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வழிபாடு
X
நாகூர் தர்காவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வழிபாடு நடத்தினார்.

நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வழிபாடு நடத்தினார். அங்குள்ள ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கிய அவர், நாகூர் தர்கா அலங்கார வாசல் உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தகர்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்மகன் உசேன் கூறுகையில் இந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வோடு பா.ஜ.க கூட்டணியில் இல்லாதது எங்களுக்கு நன்மை பயக்கும். பா.ஜ.க. எங்களோடு கூட்டணியில் இல்லாத காரணத்தால் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்று கூறினார். இஸ்லாமியர்களின் கலாச்சாரப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது எங்கள் நிலைப்பாடு. அதில் யாரும் குறுக்கிட முடியாது என்று கூறிய அவர், ஹிஜாப் அணிவது தேவைக்கோ, இஷ்டத்துக்கோ போடுவது கிடையாது அது இஸ்லாமியர்களின் கலாச்சாரம் என்று தெரிவித்தார். இந்த கலாச்சாரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்ற தமிழ்மகன் உசேன், அப்படி தலையிட்டால் அது மதக்கலவரத்தை தூண்டுவதற்கு தான் என்று குற்றம் சாட்டினார்.இந்நகழ்வில் நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க கதிரவன்,முன்னாள் அமைச்சர் ஜீவனாந்தம், மற்றும் இஸ்லாமியர்கள் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Updated On: 11 Feb 2022 6:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்